ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.44 ... வோடபோன் 3ஜி சேவை விரிவாக்கம் வோடபோன் 3ஜி சேவை விரிவாக்கம் ...
ரயில் பயணிகள் ஹெல்ப்லைன் : தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் பயனடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2013
10:38

சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து ரெயில் பயணிகளுக்கும் ரெயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் (9962500500 கட்டணமில்லாதது) சேவையை வோடபோன் அளித்துள்ளது. இந்த வசதியை இதுவரை 3.3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். பயணத்தின் போது ஒவ்வொரு பயணியும் அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக ரெயில்வே போலீசாரால் நிர்வகிக்கப்படும் இந்த அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களின் பெட்டிகளிலும் நுழைவாயில் அருகே இந்த ஹெல்ப்லைன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அவசர உதவி தேவைப்படும்போது பயணி இந்த ஹெல்ப்லைன் எண்ணை (9962500500) அழைக்க வேண்டும். இந்த அழைப்பு அந்த ரெயிலிலேயே பயணித்துக் கொண்டிருக்கும் ரெயில்வே காவலருக்கு திருப்பிவிடப்படும். வோடபோன் அனைத்து காவலர்களுக்கும் ஹேண்ட்செட்களை இலவசமாக அளித்துள்ளது. இதனால் காவலர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகுவது உறுதி செய்யப்படுகிறது.

இந்த முயற்சி முற்றிலும் ரெயில்வே போலீசால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சி தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதுடன் இந்த உதவிக்காக வோடபோன் நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் 40 நடமாடும் கியோஸ்க்களை ஒலிபெருக்கிகளுடன் அளித்துள்ளோம். இதனை போலீசார் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரெயில்வே போலீஸ் ஹேண்ட்செட்டுக்கும் மாதந்தோறும் 1,20,000 இலவச வினாடிகள் அழைப்புகள் அளிக்கப்படுகிறது. மேலும் பிரதான கால் சென்டர் லைனையும் வோடபோன் அளித்துள்ளது. அதிக பயணிகள் செல்லும் பருவங்களின்போது போலீசார் பாதுகாப்பு குறித்த இயக்கங்களை அனைத்து நிலையங்களிலும் மேற்கொள்கின்றனர். இதற்கான உதவிகளை வோடபோன் இலவசமாக அளிக்கிறது.

இந்த சேவை கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோராயமாக நாளன்றுக்கு 150 முதல் 200 அழைப்புகள் இந்த ஹெல்ப்லைனுக்கு வருகிறது. அதாவது கடந்த ஆறு ஆண்டுகளில் 3.3 லட்சம் அழைப்புகள் இதுவரை இந்த எண்ணுக்கு வந்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 29,2013
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)