பதிவு செய்த நாள்
29 நவ2013
10:40

காரைக்குடி: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் இந்தியா, தனது விரைவான, துடிப்பான, சிறப்பான 3ஜி சேவைகளை காரைக்குடியில் அறிமுகப்படுத்தியது. வோடபோன் 3ஜி சேவைகளை காரைக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் டி. மங்களேஸ்வரன் அறிமுகப்படுத்தினார். வோடபோன் 3ஜி மல்டிமீடியா, உயர் வேக மொபைல் பிராட்பேண்ட், மொபைல் கருவியில் வீடியோக்களை பார்வையிடும் வகையில் இனையதளங்களை அணுகுதல் போன்ற சேவை அனுபவத்தை விரிவுபடுத்துகிறது. 3ஜி போன் மற்றும் வோடபோன் 3ஜி நெட்வொர்க் உடன் சந்தாதாரர்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுதல், நேரடி தொலைக்காட்சி பார்த்தல், உயர் வேக இன்டர்நெட் இணைப்பை பெறுதல், இமெயில் இணைப்புகளை பதிவிறக்கம் செய்தல், இசை பதிவிறக்கம் ஆகியவற்றையும் வழக்கமான வாய்ஸ் கால்கள் மற்றும் மெசேஜ் சேவைகளையும் பெறலாம், என்று வோடபோன் தெரிவித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் கூடுதலான சலுகைகளை அளிக்கிறது. அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களும் 102 ரூபாய் மதிப்பலான பேக்கை 51 ரூபாய்க்கு பெற்று, அதை தங்கள் எண்ணிலிருந்து *121# என்ற எண்ணுக்கு டயல் செய்து ஆக்டிவேட் செய்யலாம். அனைத்து போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களும் வோடபோன் ஸ்டோர்களுக்கு சென்று ரூ. 249 பேக்கை 50 சதவிகித தள்ளுபடியில் முதல் இரண்டு பில்களுக்கு ஆக்டிவேட் செய்து கொள்ளலாம், என்று வோடபோன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|