பதிவு செய்த நாள்
29 நவ2013
13:44
புதுடில்லி:உலகின் மிக நீளமான 'பைக்' வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது, காற்றுடன் பேசுவது போன்றது. கவர்ச்சிகரமான, விசாலமான தோற்றத்துடன் உள்ள இந்தபைக்கை, ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த பைக், 11 அடி நீளமுள்ளது; சாதாரண பைக்கை விட ஐந்து மடங்கு அதிகமாக, 650 கிலோ எடையைக் கொண்டுள்ளது; ஓட்டுவதற்காக சிறப்புப் பயிற்சி பெற வேண்டும். இதுவரை, எந்த பைக் தயாரிப்பு நிறுவனமும் பயன்படுத்தாத மிகப் பெரிய, 6,728 சி.சி., திறன் கொண்ட, 'தம்தார்' இன்ஜின், இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று டிரான்ஸ்மிஷன் கருவிகளும், மூன்று கியர்களும் உள்ளன.இந்த பைக்கின், முன் சக்கரத்தில், 38 அங்குல டயரும், பின் சக்கரத்தில், 42 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பைக் விற்பனைக்காக, இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|