திருப்பதியில் குவியும் சில்லரை நாணயங்கள் நேரடியாக சேகரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்திருப்பதியில் குவியும் சில்லரை நாணயங்கள் நேரடியாக சேகரிக்க ரிசர்வ் ... ... வெங்­காயம் ஏற்­று­மதி விலையை குறைக்க பரிந்­துரை : அதி­க வரத்தால் விலை குறைந்­துள்­ளது வெங்­காயம் ஏற்­று­மதி விலையை குறைக்க பரிந்­துரை : அதி­க வரத்தால் விலை ... ...
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு நிறுவனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
15:00

அடுத்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ஸ்மார்ட் போன் விற்பனையில், இரண்டாவது இடத்தை, மைக்ரோமேக்ஸ் பிடித்திருந்தாலும், சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்துதான், இங்கு விற்பனை செய்கிறது.

சீன நிறுவனங்கள், மொபைல் போன்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை, மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்ற இந்திய நிறுவனங்களுடன் மேற்கொண்டு, அவற்றைத் தயாரித்து தருகின்றன. தற்போது ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் 21 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதனைக் கருத்தில் கொண்டு, இங்கேயே, போன்களை அசெம்பிள் செய்திட முடிவெடுத்துள்ளது. மேலும், இறக்குமதியில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளும் இதனால் தீரும் என்று எண்ணுகிறது.

இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் தன் மொபைல் போன் விற்பனையைத் தொடங்கிட மைக்ரோமேக்ஸ் திட்டமிடுகிறது. இந்தியாவில் இயங்க இருக்கும் அசெம்பிளிங் தொழிற்சாலை, இதற்கு உதவியாய் இருக்கும்.

ரஷ்யா, ரொமானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக, இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் அடுத்த ஆறு மாதங்களில், புதியதாக 20 மாடல் போன்களை மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)