பதிவு செய்த நாள்
04 டிச2013
00:50

சென்னை: எல்.ஐ.சி., என, சுருக்கமாக அழைக்கப்படும், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், இம்மாதத்துடன், 34 ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
‘ஜீவன் சுரபி’:மேற்கண்ட திட்டங்களில், ஜீவன் அம்ரித் என்ற ஆயுள் காப்பீட்டு பாலிசி விற்பனை, வரும், 7ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.இதையடுத்து, வரும் 14ம் தேதி, ஜீவன் சுரபி திட்டமும், 21 மற்றும் 28ம் தேதிகளில், மேலும், இரண்டு திட்டங்களையும், எல்.ஐ.சி., திரும்பப் பெறுகிறது.
எஞ்சிய, 28 ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் விற்பனை, இம்மாதம், 31ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.எல்.ஐ.சி., நிறுவனம், கடந்த நவம்பர் மாதம், 'கன்வர்ட்பிள் டெர்ம் அஸ்யூரன்ஸ்' 'சில்ட்ரன் டிபர்டு என்டோவ்மென்ட் அஸ்யூரன்ஸ்' உள்ளிட்ட, 14 ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்தியது.இதன் மூலம், நடப்பு மாத இறுதியுடன், எல்.ஐ.சி., மொத்தம், 48 ஆயுள் காப்பீட்டு திட்டங்களை திரும்பப் பெறுகிறது.காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா), ஆயுள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை தொடர்பாக, புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
விகிதாச்சாரம்காப்பீட்டுதாரர்களின் நலன் கருதி, இத்தகைய விதிமுறைகளை, ‘இரிடா’ அறிமுகப்படுத்தியுள்ளது.அவற்றில், காப்பீட்டிற்கான கால வரம்பை உயர்த்துவது, பிரிமியத்திற்கும், காப்பீட்டு தொகைக்கும் உள்ள விகிதாச்சாரத்தை சீரமைப்பது, குறைந்தபட்ச காப்பீட்டு தொகைக்கு உறுதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய விதிமுறைகளின் அடிப்படையில், புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள காப்பீட்டு திட்டங்களை திரும்பப் பெற்று, புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, மாற்றி அமைக்க வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது.இப்பணிகளுக்காக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு, ‘இரிடா’, இரு தவணைகளில் அளித்த கால அவகாசம், இம்மாதம், 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய விதிமுறைகள்இதையடுத்து, அனைத்து ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், வரும், 2014ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல், புதிய விதிமுறைகளின் அடிப்படையில் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.ஏற்கனவே, தனியார் துறையை சேர்ந்த, பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் பெரும்பாலான திட்டங்களை, புதிய விதிமுறைகளுக் கேற்ப மாற்றி அமைத்து விட்டன என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|