தங்கம் விலை ரூ.56 குறைந்ததுதங்கம் விலை ரூ.56 குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு ...
சாம்சங் காலக்ஸி மெகா ஐ9152
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
15:36

சென்ற ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, நவம்பர் தொடக்கத்தில் மொபைல் விற்பனை நிலையங்களில், விற்பனை யாகும் சாம்சங் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் காலக்ஸி மெகா ஐ 9152 அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 23,499.

டூயல் கோர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2., ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ஜியோ டேக்கிங், பேஸ் மற்றும் ஸ்மைல் டிடக்ஷன் திறன் கொண்ட 8 எம்.பி. கேமரா, இரண்டாவதாக 1.9 எம்பி திறன் கொண்ட கேமரா, இரண்டு ஜி.எஸ்.எம். மைக்ரோ சிம் இயக்கம் எனப் பல சிறப்புகளைக் கொண்ட தாக இந்த ஸ்மார்ட் போன் உள்ளது.

இதன் பரிமாணம் 162.6 x 82.4 x 9 மிமீ. எடை 182 கிராம். பார் டைப் வடிவத்தில் கிடைக்கும் இந்த போனில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் அகலம் 5.8 அங்குலம். இதன் யூசர் இண்டர்பேஸ் டச்விஸ் தொழில் நுட்பம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட். 64 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் அதிகப்படுத்தும் வசதி ஆகியவை கிடைக்கின்றன. ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, எட்ஜ், வை-பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதில் எப்.எம். ரேடியோ தரப்படவில்லை என்பது ஒரு குறை. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. டாகுமெண்ட் வியூவர், ஜி.பி.எஸ். வசதி ஆகியவை கிடைக்கின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கிடைக்கும் ஆர்கனைசர், இமேஜ்/விடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, வாய்ஸ் கட்டளை, சொல் பரிந்துரை, கூகுள் சர்ச், மேப்ஸ், யு-ட்யூப், காலண்டர் அன அனைத்து வசதிகளும் உள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 2600 mAh திறன் கொண்டது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)