பதிவு செய்த நாள்
05 டிச2013
00:10
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 56 ரூபாய் குறைந்து, 22,664 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்டது.சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததை அடுத்து, உள்நாட்டில் இதன் விலை, சில தினங்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட்ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,840 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,720 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஏழு ரூபாய் குறைந்து, 2,833 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 56 ரூபாய் சரிவடைந்து, 22,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 70 ரூபாய் குறைந்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 46 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,980 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|