பதிவு செய்த நாள்
05 டிச2013
15:18

பிரேக் போடும்போது கார் முழுவதும் ஆடுவது : உங்கள் காரில் பிரேக் போடும்போது, கார் முழுவதும் ஆடினால், நீங்கள் கவனிக்க வேண்டியது பின்பக்க பிரேக். அதாவது, உங்கள் காரின் பின்பக்கம் உள்ள டிரம் பிரேக்கில் கோளாறா என்று கண்டறியுங்கள். அது டிரம் - பிரேக் தான் என அறிந்து விட்டீர்கள் என்றால், பார்க்கிங் பிரேக்கை உபயோகியுங்கள். எமர்ஜென்சி பிரேக்கை அதி வேகத்தில் பயன்படுத்தாதீர்கள்; ஆபத்தில் முடியும். பின்பக்க டிரம் பிரேக்கில் பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள். உங்கள் காரின் பின்பக்க பிரேக் டிஸ்க் பிரேக் என்றால், அதற்கென தனிப்பட்ட "எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம்' உள்ளது. அதனால் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
தேய்ந்த மென்மையான பிரேக் பெடல்
பிரேக் பெடல் தேய்ந்து விட்டால் அல்லது பெடல் தரையில் போ# அழுந்தி விட்டால், மாஸ்டர் சிலிண்டரில் உள்புறம் அல்லது வெளிபுறம் ஒழுக ஆரம்பித்துவிடும் அல்லது பிரேக் அமைப்பில் ஓர் உடைப்பு ஏற்படும். எனவே, முதலில் உங்கள் பிரேக் ஆயிலை சோதித்து பாருங்கள். பிரேக் ஆயில் முழுதாக இருந்து ஏதும் கசிவு இல்லாமல் இருந்தால், இங்கு எந்த பிரச்னையும் இல்லை; உட்பகுதியில் தான் பிரச்னை ஏற்பட்டிருக்கும். அதாவது மாஸ்டர் சிலிண்டரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கசிவு ஏற்படும். வெளிப்புற கசிவு கார் உட்புறத்தில், பிரேக் பெடல் அருகில் உள்ள கார்பெட்டை தூக்கிப் பார்த்தால் தெரிந்து விடும்.
அப்போது மாஸ்டர் சிலிண்டரில், கசிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனே சிலிண்டரை மாற்றி விடுங்கள். ஏனெனில், மாஸ்டர் சிலிண்டரை மீண்டும் சரி பார்ப்பது என்பது அதிக வேலை பிடிக்கும். எனவே, புதிய மாஸ்டர் சிலிண்டரை மாற்றுவதே சிறப்பு.
பிரேக் பிடிக்கும்போது கார் ஒரு பக்கமாக இழுத்துச் செல்வது
பிரேக் பிடிக்கும்போது கார் ஒரு பக்கமாக இழுத்துச் செல்வது அபாயகரமானது. இதற்கு முக்கிய காரணம் காலிபர் உறைந்து விடுவது. காலிபர் உறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. பிஸ்டன் சிக்கிக் கொள்வது முதல் காரணமாக உள்ளது. பிஸ்டன் சிக்கிக் கொள்வதை நம்மால் எடுக்க முடியாது; எனவே காலிபரை மாற்றிவிடுங்கள். மற்றொன்று காலிபர்ஸ்லைடு பின் வழவழப்பு குறைந்து விட்டால், இப்பிரச்னை ஏற்படும். இந்த பிரச்னை ஏற்பட்டால் பிரேக் போடும்போது, ஒரு வித ஒலி வரும். இதன் பிறகு ஸ்லைடு பின்களை கழற்றி சுத்தம் செய்து எண்ணெய் விட்டு பொருத்தி விட வேண்டும். சில சமயம் முன்பக்க டயர் உரியில்லாதபோது, ஒரு பக்கமாக கார் இழுத்து செல்லும். அந்த சமயத்தில் முன்பக்க டயரை சோாதித்து அதிக பிரச்னை இருந்தால் டயரை மாற்றி விடுங்கள்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|