பதிவு செய்த நாள்
05 டிச2013
15:19

இந்தியாவில் செடான் வகை கார்கள் அதிகமாக விரும்பப்படுகின்றன. இவற்றின் விலை அனைவரும் வாங்கும் வகையில் இல்லை என, பலரும் நினைக்கின்றனர். செடான் வகை கார்களில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், பல கார்கள் கிடைக்கின்றன. அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களிலும், குறைந்த விலை செடான் மாடல்கள் உள்ளன. 10 லட்சத்திற்கு குறைவான செடான் வகை கார்களில் சில உங்கள் பார்வைக்கு...
டாடா இண்டிகோ சி.எஸ்., ஜி.எல்.எக்ஸ்.,
அழகிய வடிவமைப்புடன் சிறந்த வகையில் இயக்கக் கூடிய இண்டிகோ சி.எஸ்., ஜி.எல். எக்ஸ். திறன் சிறப்பானது. கூடுதல் இடவசதி மற்றும் எரிபொருள் சிக்கனம் தரக்கூடிய இந்த காரின் விலை 5 லட்சம் ரூபாய் முதல் துவங்குகிறது.
மகிந்திரா வெரிட்டோ
கூடுதல் இடவசதி, அழகான தோற்ற பொலிவு, எரிபொருள் சிக்கனம் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டது. மகிந்திரா வெரிட்டோ ஸ்டைலான டிரைவர் தகவல் அமைப்பை கொண்டுள்ளது. 5.50 லட்ச ம் ரூபாய் வரை கிடைக்கிறது.
மாருதி சுவிப்ட் டிசைர்
அசத்தும் தோற்றம் கொண்ட சுவிப்ட் டிசைரின் குரோம் கிரில், கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் காருக்கு சிறப்பு அம்சங்களாக உள்ளன. இதன் உட்புற அழகும் மனதை மயக்குகிறது. இதன் விலை 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை.
டோயோட்டோ ஈடியோஸ்
அதிநவீன ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், அதுவும் காற்று சுத்தப்படுத்தும் பில்டருடன் உள்ளது. "ஸ்டியரிங் வீல்' அழகான வடிவமைப்பில் உள்ளது. ஐந்து பெரியவர்கள் வரை அமரக்கூடிய வகையில் அதிக இடவசதி உள்ளது. பார்த்தால் பரவசமடையும் தோற்றத்துடன் பின்புற லக்கேஜ் பகுதி. 595 லிட்டர் இடவசதியுடன் உள்ளது. இதன் விலை 5.50 லட்சம் ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரை.
ஹோண்டா சிட்டி
அதிகம் விற்பனையாகும் செடான் வகை கார்களில் இதுவும் ஒன்று, ஆட்டோமெடிக் கியர் மற்றும் 1497 சி.சி., பெட்ரோல் இன்ஜின் கொண்டது. பெட்ரோல் இன்ஜின் என்றவாறு உள்ளது. இது இந்தியாவில் 7 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.
நிஸான் சன்னி ஸ்டைலான மேற்புறம், அதிக இடவசதியுடன் உள்புறம் என நிஸான் சன்னி துள்ளி ஓடுகிறது. ஸ்டியரிங் சீல் மேற்பகுதியில் ஆடியோ கண்ட்ரோல் கொண்டது. "ஏசி' வசதி கொண்டது. இதன் விலை 6 லட்சம் ரூபாயில்இருந்து துவங்குகிறது.
டாடா மான்ஸா
அட்டகாசமான இசையினை கேட்கும் வகையில் மியூசிக் சிஸ்டத்தை டிரைவரின் சீட் எலெக்டிரிக் முறையில் மாற்றம் செய்யும் வசதியும் கொண்டது. ஸ்டியரிங் மேற்புறத்தில் ஆடியோ, டெலிபோன் மற்றும் ப்ளூடூத் கன்ட்ரோல் உள்ளன. விலை 6 லட்சம் ரூபாயில் இருந்து துவக்கம்.
போர்டு பியாஸ்டா கிளாசிக்
அழகான உட்புற தோற்றத்துடன் டிரைவர் மற்றும் முன் பக்கம் அமர்பவருக்கும் ஏர்-பேக் உள்ளது. புதிய இரண்டு எம்.பி.,3 பிளேயர் மற்றும் திருட்டு தடுப்பு அமைப்பும் உள்ளது. சாவி இல்லாமல் உள்ளே செல்ல திட்டமிட்ட அமைப்பு மற்றும் தானாகவே திரும்ப பூட்டிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|