பதிவு செய்த நாள்
06 டிச2013
00:00

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 88 ரூபாய் உயர்ந்தது.சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததால், உள்நாட்டில், ஆபரணங்கள் விலை தொடர்ந்து, சரிவடைந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, தங்கம் விலை, நேற்று, சற்று உயர்ந்து காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,833 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,664 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 11 ரூபாய் உயர்ந்து, 2,844 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 88 ரூபாய் அதிகரித்து, 22,752 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 115 ரூபாய் உயர்ந்து, 30,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,445 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|