பதிவு செய்த நாள்
06 டிச2013
00:06

புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பு 2013–14ம் நிதியாண்டில், இதுவரை, டீசல் பயன்பாடு குறைந்துள்ளது என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ்.புடோலா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவையில், டீசல் பயன்பாடு, 45 சதவீத அளவிற்கு உள்ளது.
விற்பனை வளர்ச்சி:கடந்த 2003–04ம் நிதியாண்டின், ஏப்., – அக்., வரையிலான காலத்தில், டீசல் விற்பனை வளர்ச்சி, 6–8 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின், இதேகாலத்தில், கடந்த ஆண்டை விட, 0.8 சதவீதம் குறைந்து, 3.95 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.நாடு தழுவிய அளவில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஜெனரேட்டர்களுக்கான டீசல் பயன்பாடு குறைந்துள்ளது.
இதனால், ஒட்டுமொத்த அளவில் டீசலுக்கான தேவை குறைந்துள்ளது.அது மட்டுமின்றி, டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் வகையில், மாதந்தோறும், லிட்டருக்கு, 50 பைசா உயர்த்தப்பட்டு வருவதும், அதன் தேவை குறைவிற்கு முக்கிய காரணம்.
கடந்த ஜனவரி மாதம் முதல், இதுவரையில், டீசல் விலை, லிட்டருக்கு, 6.62 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2010ம் ஆண்டு, ஜூன் மாதம், பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு, அதன் பயன்பாடும் குறைந்தது. அதே சமயம், மானிய விலை காரணமாக, டீசல் பயன்பாடு உயர்ந்தது.தற்போது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையிலான விலை வித்தியாசம், 9.99 ரூபாயாக குறைந்து விட்டது.
ஆகவே, தற்போது தேவைக்கும்,பயன்பாட்டிற்கும் ஏற்ப செயல்பட, சந்தையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது. அதே சமயம், பெட்ரோல் பயன்பாடு, 9.05 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு, 9.02 லட்சம் டன்னாக இருந்தது.
வருவாய் இழப்பு:சென்ற முழு நிதியாண்டில், டீசல் விற்பனை, 6.68 சதவீதம் அதிகரித்து, 6.90 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த, 2003–04ம் நிதியாண்டில், 3.70 கோடி டன்னாக இருந்தது.பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 9.99 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இது, ஒரு லிட்டர் மண்ணெண்ணெயில், 36.20 ரூபாயாகவும், சமையல் எரிவாயுவில், 542.50 ரூபாயாகவும் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|