தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தூய பால் உற்பத்தி திட்டம்!தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தூய பால் உற்பத்தி திட்டம்! ... தேவை குறைந்ததால்தேயிலை விலை சரிவு தேவை குறைந்ததால்தேயிலை விலை சரிவு ...
புதுமண தம்­ப­தி­க்கு விமான கட்­ட­ணத்தில் சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2013
03:00

மும்பை: புது­மணத் தம்­ப­தி­யரின் தேன்­நி­லவு கொண்­டாட்­டங்­களை குறிவைத்து, பல்­வேறு விமானச் சேவை நிறு­வ­னங்கள், பயண டிக்­கெட்டில் அதி­ரடி சலு­கை­களை அளிக்கத் துவங்­கி­யுள்­ளன.திரு­மணம் என்­பது, நகை, உடை, சீர் வரிசை, விருந்து உள்­ளிட்­ட­வற்­றுடன் முடிந்து விடும் நிகழ்ச்சி அல்ல.அதையும் தாண்­டிய, வர்த்­தக வாய்ப்­புகள் திரு­ம­ணத்தில் உள்­ளதை, விமான சேவை நிறு­வ­னங்கள் புரிந்து கொண்­டுள்­ளன.

நியூயார்க்அதனால், அவை, தற்­போ­தைய திரு­மண காலத்தில், வரு­வாயை பெருக்கும் நோக்கில், அதி­ரடி சலுகை திட்­டங்­களை அறி­வித்­துள்­ளன.குறிப்­பாக, தேன்­நி­லவு கொண்­டாட, வெளி­நாடு செல்லும் ஜோடி­க­ளுக்கு, பல விமானச் சேவை நிறு­வ­னங்கள், கட்­டணச் சலு­கை­களை அறி­வித்­துள்­ளன.துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் நிறு­வனம், மொரீ­ஷியஸ், கேப் டவுன், லண்டன், பாரிஸ், ஜூரிச், பிரான்க்பர்ட், நியூயார்க் உள்­ளிட்ட, 20 இடங்­க­ளுக்­கான விமான பயணக் கட்­ட­ணத்தை, 20 சத­வீதம் குறைத்­துள்­ளது.

இந்த விலை குறைப்பு, சாதா­ரண மற்றும் வர்த்­தக வகுப்பு கட்­ட­ணங்­க­ளுக்கும் பொருந்தும் என, எமிரேட்ஸ் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.குறைந்த கட்­ட­ணத்தில் விமானச் சேவை வழங்கும் மலே­சி­யாவின் ஏர்­ஏ­ஷியா நிறு­வ­னமும், புது­மணத் தம்­ப­தியர் வாயி­லான வரு­வாயை அதி­க­ரிக்க, பல்­வேறு சலு­கை­களை அறி­வித்­துள்­ளது.கோலா­லம்பூர்இதன்­படி, திருச்சி, கொச்சி மற்றும் கோல்­கட்­டாவில் இருந்து, கோலா­லம்பூர் செல்­வ­தற்கு, ஒரு வழி விமான பயணக் கட்­ட­ண­மாக, வரிகள் உட்­பட, 5,000 ரூபாயை, இந்­நி­று­வனம் வசூ­லிக்­கி­றது.சென்னை அல்­லது பெங்­க­ளூரில் இருந்து, கோலா­லம்பூர் செல்­வ­தற்­கான கட்­டணம், 6,500 ரூபாயில் இருந்து துவங்­கு­கி­றது.

தாய்­லாந்துதேன்­நி­லவின் சொர்க்­க­பு­ரி­யாக வர்­ணிக்­கப்­படும் மலே­சி­யாவின் லங்­காவி, தாய்­லாந்தின் புக்கட் போன்ற இடங்­க­ளுக்கு, கோலா­லம்­பூரில் இருந்து செல்­வ­தற்­கான விமான பயணக் கட்­ட­ணமும் வெகு­வாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.இதன்­படி, கோலா­லம்­பூரில் இருந்து, லங்­காவி, இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி, தாய்­லாந்தின் புக்கட் ஆகிய இடங்­க­ளுக்கு செல்­வ­தற்­கான, ஒரு வழி விமான பயணக் கட்­ட­ணத்தை, 2,999 ரூபா­யாக ஏர்­ஏ­ஷியா குறைத்­துள்­ளது.இந்த சிறப்பு திட்­டத்தின் கீழ், வரும், 15ம் தேதிக்குள் முன்­ப­திவு செய்து, 2014ம் ஆண்டு, ஜன­வரி 6 முதல், ஏப்ரல் 30ம் தேதிக்குள் விமான பயணம் மேற்­கொள்­ளலாம்.

அது மட்­டு­மின்றி, விமான பய­ணத்­திற்­கான முன்­ப­திவின் போதே, எடுத்துச் செல்லும் உட­மை­க­ளுக்­கான கட்­ட­ணத்­தையும், 66 சத­வீதம் குறைந்த செலவில் ­ப­திவு செய்து கொள்­ளலாம்.முன்பதிவுஇவற்­றுக்­கெல்லாம் மேலாக, புது­மணத் தம்­ப­திகள், விமான பய­ணத்­தின்­போதே, 'ஷாம் பெய்ன்' உடன் 'கேக்' வெட்டி, தேன்­நி­லவு கொண்­டாட்­டத்தை துவக்­கு­வ­தற்­கான முன்­ப­திவு வச­தியை, எமிரேட்ஸ் நிறு­வனம் அளிக்­கி­றது என்­பது, குறிப்­பி­டத்­தக்­கது.இது­போன்ற, மேலும் பல விமானச் சேவை நிறு­வ­னங்கள், திரு­மண காலத்தை முன்­னிட்டு,பல்­வேறு சலு­கை­களை வழங்­கு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)