பதிவு செய்த நாள்
10 டிச2013
03:07

மும்பை: நேற்று முன்தினம் வெளியான, 4 சட்டமன்ற தேர்தல் முடிவுகளால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.சென்ற வார இறுதி வர்த்தக தினத்தில், ரூபாய் மதிப்பு, 61.42ஆக இருந்தது. இந்த மதிப்பு, நடப்பு வாரத்தின் துவக்க நாளான, நேற்று, மேலும், 28 காசுகள் அதிகரித்து, 61.14ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.05ஆக உயர்ந்தது. இது, ஒரு கட்டத்தில், 60.85வரை சென்றது. இது, கடந்த நான்கு மாதங்களுக்கு பின், அதாவது, ஆகஸ்ட், 12ம் தேதிஅன்று காணப்பட்ட, ரூபாயின் அதிகபட்ச மதிப்பாகும்.
கடந்த ஆகஸ்ட், 28ம் தேதி ரூபாய் மதிப்பு, மிக அதிகபட்சமாக, 68.85 என்ற அளவில் வீழ்ச்சி கண்டது. அது முதல், நேற்று வரை, ரூபாய் மதிப்பு, 12.71 சதவீதம் உயர்ந்துள்ளது.இருந்தபோதிலும், நடப்பாண்டு ஜனவரி முதல் நேற்று வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 9.94 சதவீதம் குறைந்துள்ளது.
நடந்து முடிந்த, 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோரம் தவிர, ஏனைய மாநிலங்களில் காங்., படுதோல்வி அடைந்துள்ளது. இது, வரும் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கான அச்சாரமாக கருதப்படுகிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடு அதிகரித்து, டாலர் புழக்கம் உயர வழி வகுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|