ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்உருக்கு உற்­பத்தி அதி­க­ரிப்புஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்உருக்கு உற்­பத்தி அதி­க­ரிப்பு ... தேர்தல் முடிவு எதிரொலி: 'சென்செக்ஸ்' மீண்டும் 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது தேர்தல் முடிவு எதிரொலி: 'சென்செக்ஸ்' மீண்டும் 21 ஆயிரம் புள்ளிகளை ... ...
கடலை எண்ணெய், பொரி கடலை, சர்க்­கரை விலை குறைந்­தது : பருப்பு விலையில் மாற்றம் இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2013
03:10

விரு­து­நகர்: விருது­நகர் சந்­தையில், கடலை எண்ணெய், சர்க்­கரை ஆகி­ய­வற்றின் விலை குறைந்­துள்­ளது. பருப்பு வகை­களின் விலையில் மாற்­ற­மில்லை.சந்­தையில், கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300 ரூபாய்க்கும், சன்­பி­ளவர் எண்ணெய் 1,250 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கின்­றன. இவற்றின் விலை, கடந்த வாரத்­தை­விட, ‘டின்’­­னுக்கு தலா, 50 ரூபாய் குறைந்­துள்­ளது.நிலக்­க­டலை பருப்புநல்­லெண்ணெய் (2,900 ரூபாய்), பாமாயில், (1,025 ரூபாய்) ஆகி­ய­வற்றின் விலையில் மாற்­ற­மில்லை.80 கிலோ நிலக்­க­டலை பருப்பு 3,900 ரூபாய்க்கும்,100 கிலோ, கடலைப் புண்­ணாக்கு 3,300 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கி­றது. இவற்றின் விலை மூட்­டைக்கு, 100 ரூபாய் குறைந்­துள்­ளது.சர்க்­கரை விலை, கடந்த வாரத்தை விட, மூட்­டைக்கு (100 கிலோ), 15 ரூபாய் குறைந்து, 3,015 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது.55 கிலோ கொண்ட பொரி­க­டலை மூட்டை விலை, 100 ரூபாய் குறைந்து, 2,560 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது.

மைதா90 கிலோ மைதா மூட்டை (3,090ரூபாய்) மற்றும் 90 கிலோ ரவை மூட்டை (3,385 ரூபாய்) விலையில் மாற்­ற­மில்லை.பர்மா உளுந்து, 100 கிலோ (பொடி வகை), 4,350 ரூபாய்க்கும், பரு­வட்டு வகை, 4,650 ரூபாய்க்கும், நாட்டு உளுந்து 5,400 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கி­றது.100 கிலோ உளுத்தம் பருப்பில், பர்மா பொடி வகை, 5,300 ரூபாய்க்கும், பரு­வட்டு வகை, 5,800 ரூபாய்க்கும், நாட்டு வகை, 6,900 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.100 கிலோ துவரம் பருப்பில், நாட்­டு­வகை, 6,900 ரூபாய்க்கும், இரண்டாம் வகை, 6,000 ரூபாய்க்கும், பொடி வகை, 5,700 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கின்­றன.கடந்த வாரத்தை விட, இவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்­ற­மில்லை.

அடுத்த சில வாரங்­களில், கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட மாநி­லங்­களில் இருந்து, துவரம் பருப்பு வரத்து அதி­க­மாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், இவற்றின் விலை குறைய வாய்ப்­புள்­ளது.மிளகாய் வற்றல்முதல் ரக பாசிப்­ப­ருப்பு (100 கிலோ), 8,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 8,000 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கின்­றன.ஆந்­திரா, குண்டூர் மிளகாய் வற்றல், 100 கிலோ, 8,000 முதல் 8,100 ரூபாய் வரை விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. நாட்­டு­ வற்றல் வரத்து இல்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 10,2013
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)