தங்கம் விலை ரூ.104 குறைந்ததுதங்கம் விலை ரூ.104 குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆரவாரமாய் ஆர்ப்பரிக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
14:57

ஸ்கோடா ஆக்டேவியா, 2001ம் ஆண்டு, முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. வாகன சந்தையில், இந்த செக்மென்ட், கார்களில், தனக்கு சரியான போட்டி இல்லாத காரணத்தாலும், பெரும் வெற்றியை, இந்த கார் பெற்றது. பின், 2004ல், ஆக்டேவியா வி.ஆர்.எஸ்., 1.8 லி., டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனையில் சக்கைபோடு போட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்கோடா ஆக்டேவியா, மூன்றாவது தலைமுறை மாடல், பலவித மேம்பாடுகளுடன் வந்துள்ளது.

டூ சிறப்பான தனித்தன்மை கொண்ட ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் அழகு.

டூ உட்புறமும், வெளிப்புறமும் உள்ள உயர்தரமான அமைப்பு.

டூ பெரிதான தோற்றத்துடன் தாராள இடவசதி. (590 லி., பூட்)

டூ ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்

டூ மிக மென்மையான உயர் நுட்பத்திறனுமான, டி.எஸ்.ஜி., கியர் சிஸ்டமும், ஸ்கோடா ஆக்டேவியாவை, தேர்வு செய்ய, பொருத்தமான காரணங்களாகும். புதிய ஆக்டேவியாவில் அடக்கமான 1.4 லி., டி.எஸ்.ஐ., சிக்கனமான, 2.0 லி., டீசல் மற்றும் ஆர்ப்பாட்டமான, 1.8 லி., டி.எஸ்.ஐ., என்ற, மூன்று இன்ஜின் தேர்வு இதில் கிடைக்கிறது. என்.சி.ஏ.வி.,ன், 5 ஸ்டார் ரேட்டிங்கை, புதிய ஆக்டேவியா பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பிற்கு, 6 ஏர்பேக்கள், ஏ.பி.எஸ்., மற்றும் இ.பி.டி., இ.எஸ்.பி., - இ.டி.எல்., மற்றும் பல புதிய அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. சொகுசு அம்சங்களான, சன் ரூப், எலக்ட்ரிக் சீட், பை - ஜெனான் ஹெட்லைட் போன்றவை, இந்த காரின் ப்ரீமியம் அந்தஸ்த்தை பறைசாற்றுகிறது.

ஆக்டேவியாவின், 3 ட்ரிம்கள், ஆக்டீவ், ஆம்பீஷன் மற்றும் எலிகன்ஸ் என்று, 3 ட்ரிம்களில் ஆக்டேவியா வருகிறது. ஆக்டீவ் மற்றும் ஆம்பீஷனில், 1.4 லி., டி.எஸ்.ஐ., இன்ஜின் உள்ளது. 1.8 லி., டி.எஸ்.ஐ., பெட்ரோல் இன்ஜின், எலிகன்சில் தான் உள்ளது. மானுவல் கியர் பாக்ஸ் டீசல் ஆக்டீவ் மற்றும் ஆம்பிஷனில் உள்ளது. டி.எஸ்.ஜி., ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் ஆம்பீஷன் மற்றும் எலிகன்சன் கிடைக்கிறது. "டி' செக்மென்ட் வகையில், டீசல் இன்ஜினுடன் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் வருவது, ஸ்கோடாவின் சாமர்த்தியமான முடிவைக் காட்டுவதாகும்.

சிறப்பு அம்சங்கள்

ஆக்டேவியாவின் எலிகன்ஸ் மாடலில், 3 மெமரி ப்ரீசெட் கொண்ட எலக்ட்ரிக் சீட் ஓட்டுனர், தன் இருக்கையை சுலபமாகவும், சுகமாகவும் மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் பைஜெனான் எல்.டி.டி., ஹெட்லைட் வண்டியை, பூட்டிய பின்பும், திறந்த பின்பும் தானாகவே, ஒளிர்ந்து, வண்டியை சுற்றிலும் வெளிச்சத்தை நிரப்புகிறது.

இதன் ரேமிக் சன்ரூப் மற்ற கார்களிலிருந்து, மாறுபட்டு வெளிப்புறம் திறக்கக் கூடியதாகவும், பாதி கூரை அளவிலும் அழகாக இருக்கிறது. வெளிச்சத்தை தடுக்கும் வின்ட் ப்ரேக்கர் இதில் உள்ளதால், கேபின் அமைதியாகவே உள்ளது. மேலும், இதில், ரெயின் சென்சார் உள்ளதால், மழை வந்தால், தானாகவே மூடிக் கொள்ளும்.

ஆக்டேவியாவின் உட்பறம் நல்ல விஸ்தாராமாக உள்ளது. ப்யூர் லெதர் மற்றும் லெதரட்டினால் ஆன, இருக்கைகள் சுகமாக உள்ளது. டேஷ்போர்ட் எளிமையாகவும், நளினமாகவும் உள்ளது. 4 ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் அடக்கமாகவும் ஆடியோ, டெலிபோன், எம்.ஐ.டி., போன்றவற்றை இயக்கக்கூடியதாகவும் உள்ளது. இதன் ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், சீரான குளிர்ச்சியை கொடுப்பதுடன், "ரீ - சர்க்குலேஷன் மோட்' பொருத்திவிட்டால், உள்ளேயிருக்கும் காற்றின் தரம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப, தானாகவே மாற்றிக் கொள்கிறது. இதன் பார்க்ட்ரானிக் சிஸ்டம் சிறப்பாக இருப்பதால், நீளமான பானட் கொண்ட வண்டியை பார்க் செய்யவும் உதவுகிறது.

இதன் பின்புற நாட்ச்பேக் வடிவமைப்பு, தராள, "பூட்' இடமாக, 590 லி., அளவை கொண்டுள்ளது. இதற்கு பின்புற இருக்கையின் நடுவிலிருந்து, (ஆம்ரெஸ்ட் மடித்து) பொருட்களை வைக்கவும் வழி உள்ளது. பின்புற இருக்கைகளை மடித்துவிட்டால், பொருட்கள் எடுத்துச் செல்ல, 1,580 லி., இடம் கிடைக்கிறது.

இதன் பொலிரோ ஆடியோ சிஸ்டம், 5.8 அங்குல திரையுடன் உள்ளது. இதன், 8 ஸ்பீக்கர் மூலம், கிடைக்கும் ஆடியோ தரம் அசத்துகிறது. இத்திரையின் மூலம், வண்டியின் பல அம்சங்களையும் இயக்க முடிவதும், மொபைல் போன் போல, கைகளை அருகே கொண்டு வந்ததும், டிஸ்ப்ளே வரும் ப்ராக்சிமிட்டி சென்சார் கொண்டுள்ளதும் பாராட்டக் கூடியவை.

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் இருப்பது ஸ்திரமான, கட்டுக்கொப்பான ஒட்டும் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மல்டி கொலிஷன் ப்ரேக்கிங், ஒருமுறை இடிக்க நேர்ந்தால், உடனே, ஆட்டோமெட்டிக் ப்ரேக்கிங் மோட்டிற்கு சென்று வருவதுடன், ஏ.பிஸ்., இ.பி.டி., போன்றவைகளும இயங்கத் துவங்கும். இதன் ஆன்டி ஸ்லிப் ரெகுலேஷன், சக்கரங்கள் சழற்சியை, ஓட்டுனருக்கு ஏற்ப கட்டுப்படுத்துகிறது.

மொத்தத்தில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா, இந்த செக்மென்ட் கார்களில், அதிக செயல்திறன், நவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் விலைக்கேற்ற தரத்துடன், சிறப்பான இடத்தை வாடிக்கையாளர் மனதில் பெற்று விடும் என்பது உறுதியே.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)