பதிவு செய்த நாள்
14 டிச2013
00:21
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவடைந்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 61.83ஆக இருந்தது. இது, நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, மேலும், 30 காசுகள் குறைந்து, 62.13ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 27 காசுகள் குறைந்து, 62.10ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 62.20 வரை சரிவைக் கண்டது.
கடந்த அக்டோபர் மாதம், நாட்டின் தொழில்துறை உற்பத்தி சரிவடைந்துள்ளதும்; நவம்பரில், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது குறித்த தகவல்களால், நேற்று, நிதிச் சந்தைகளில் அன்னிய முதலீடு குறைந்தது.இதனால், டாலருக்கான தேவை அதிகரித்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.நடப்பாண்டு ஜனவரி முதல், ரூபாய் மதிப்பு, 11.45 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தோனேஷியாவின் ருப்யா, ஜப்பானின் யென் ஆகியவற்றை அடுத்து, இந்தியாவின் ரூபாய் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|