பதிவு செய்த நாள்
14 டிச2013
00:26
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 104 ரூபாய் குறைந்து, 22,504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், தங்க ஆபரணங்கள் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,826 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,608 ரூபாய்க்கும் விற்பனையானது.
24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 13 ரூபாய் குறைந்து, 2,813 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 104 ரூபாய் சரிவடைந்து, 22,504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 130 ரூபாய் குறைந்து, 29,790 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 46.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,655 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|