பதிவு செய்த நாள்
14 டிச2013
01:14

புதுடில்லி: நடப்பாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில், 458 ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள், 2,676 கோடி டாலர் (1.61 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற் கொண்டுள்ளன.இது, கடந்தாண்டில் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட, நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையுடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் சரிவாகும் என, ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தோர்ன்டன் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், நிறுவனங்கள், 131 கோடி டாலர் மதிப்பிற்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.மதிப்பீட்டு மாதத்தில், அதிகளவில், ரியல் எஸ்டேட் துறையில், 51.32 கோடி டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த இணைத்தல் நடவடிக்கையில் இத்துறையின் பங்களிப்பு, 39 சதவீதம் ஆகும்.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள் (22.52 கோடி டாலர் /17 சதவீதம்), மருந்து (19.31 கோடி டாலர்/15 சதவீதம்), வங்கி மற்றும் நிதி சேவை துறை (17.52 கோடி டாலர்/13 சதவீதம்) தொலைத் தொடர்பு (8 கோடி டாலர்/6 சதவீதம்) ஆகியவை உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|