பதிவு செய்த நாள்
14 டிச2013
01:15

மும்பை: வங்கிகள், ஏ.டி.எம்., இயந்திரங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம், பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பது குறித்து, ஆலோசித்து வருகின்றன.பெங்களூரில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண் ஒருவர், அண்மையில் கொடூர தாக்குதலுக்கு உள்ளானார்.
இதையடுத்து, ஆளில்லாத, ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பிற்கு ஆட்களை நியமிக்குமாறும், இல்லையென்றால் அவற்றை மூடுமாறும், வங்கிகளுக்கு, கர்நாடக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.பல்வேறு மாநில அரசுகளும், இது போன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.இதனால், வங்கிகளின் ஏ.டி.எம்., பராமரிப்பு செலவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, ஒவ்வொரு முறை ஏ.டி.எம்., மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கட்டணம் வசூலிக்க, வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
தற்போது, ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் ஏ.டி.எம்., மையங்களில், சராசரியாக, 200 பரிவர்த்தனை மேற்கொண்டால், வங்கிகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு, சராசரியாக, 6 ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி கணக்கிட்டால், வங்கிகளுக்கு, ஒரு மாதத்தில், 360 கோடி ரூபாய் செலவாகிறது.இச்செலவினை, வாடிக்கையாளர் தலையில் சுமத்த வங்கிகள் தயாரானால், ஏ.டி.எம்., பயன்பாடு பெருமளவு குறையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|