பதிவு செய்த நாள்
14 டிச2013
01:22

உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஆர்வமுடன் பங்குகளை வாங்கிப் போட்டு வருகின்றன.பரஸ்பர நிதி, காப்பீடு உள்ளிட்ட துறைகள் சார்ந்த, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், கடந்த நவம்பரில், 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.
பங்கு முதலீடு:அதே சமயம், இதே மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டை விட, உள்நாட்டு நிறுவனங்களின் நிகர பங்கு விற்பனை அதிகமாக உள்ளது.இது போன்ற நிலை, 80 மாதங்களுக்கு (6.8 ஆண்டுகள்) பிறகு, முதன் முறையாக ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த, 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதே போன்ற நிலை காணப்பட்டது. அந்த மாதத்தில், உள்நாட்டு நிதி நிறுவனங்களின் மாதாந்திர, நிகர பங்கு விற்பனை, அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீட்டை விட, அதிகம் இருந்தது என, டச்சு பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக, அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீடு மேற்கொண்டு வருகையில், பங்குச் சந்தை ஏற்றம் காண்பது வாடிக்கை.அதுபோன்று, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளை அதிக அளவில் விற்கும்போது, பங்குச் சந்தை சரிவை காணும்.
'சென்செக்ஸ்' :இதன்படி, கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், 30,687 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து உள்ளன. இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 37,725 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளன. அதே சமயம், இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையின், குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 7.9 சதவீதம் உயர்ந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி', 12.8 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கார்வி கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஸ்வப்னில் பவார் கூறியதாவது:பங்கு சந்தை உச்சத்தில் இருக்கும்போது, சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்வது வழக்கம்.
நம்பிக்கை:குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற நடைமுறை அதிகரித்து வருகிறது. தற்போது, பல முதலீட்டாளர்களுக்கு, பங்குகளில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.ஆகவே, அவர்கள் பங்குச் சந்தை எழுச்சி காணும்போது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி பங்குகளை விற்பனை செய்கின்றனர். நீண்ட கால முதலீடுகளில் அவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகர பங்கு முதலீடு:டிசம்பர் 11ம் தேதி வரையிலான நிலவரப்படி,அன்னிய நிதி நிறுவனங்களின், நிகர பங்கு முதலீடு, 1,02,892 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம், இதே காலத்தில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் நிகர அளவில், 72,036 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|