பதிவு செய்த நாள்
14 டிச2013
05:12

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வகை காரான டாட மான்ஸா க்ளப் க்ளாஸ் செடான் வ்கை காரை அறிமுகப்படுத்தியது.
புதிய காரை அறிமுகப்படுத்திய மண்டல மேலாளர் சூரஜ் சுப்பாராவ் கூறுகையில் டாடா மான்ஸா க்ளப் க்ளாஸ் வகை கார்கள் குவாட்ராஜெட் டீசல் மற்றும் சபையர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் மூலம் டீசலுக்கு 21.02 கி.மீ., பெட்ரோலுக்கு 13.7 வரையிலும் மைலேஜ் அளிக்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நன்கு மடக்க கூடிய ஸ்டீயரிங் வடிவமைப்பு, ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் முன்புற ஏர் பேக்குகள் உள்ளன. குறிப்பிட்ட ஆர்.பி.எம்.,ஐ தாண்டும் போது டாக்கோ மீட்டரில் சாதாரணமாக காணப்படும் சிகப்பு குறியீட்டிற்கு பதில் க்ரிட்டிகல் ரெவ் இண்டி கேட்டர் சிகப்பு நிறமாக மாறும் தன்மை கொண்டது.
இத்துடன் நல்ல வச்தி மற்றும் இடவசதி போன்ற பாரம்பரிய தேவைகளும் உள்ளடங்கியுள்ளன. இதன் உள் அலங்கார அமைப்பு மற்றும் அதி நவீன தொழில் நுட்ப சிறப்பம்சங்களுடன் நடுத்தர அளவிலான கார் பிரிவில் செடான் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புது அளவீட்டினை நிர்ணயித்துள்ளது.
முதன் முறையாக டச் ஸ்கிரீன் மல்ட்டிமீடியா இன்டர் பேஸ், ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ்., ஆட்டோமேட்டிக் க்ளைமேடிக்கண்ட்ரோல், மல்ட்டி மீடியா டிவிடி பிளேயர், விரலசைவில் இயங்கும் மல்ட்டிகலர் 6.2 இஞ்ச் ஹைரெசொல்யூஷன் டிஸ்ப்ளே மூலம் அளி்க்கிறது.
இந்த கார் இன்பினிடி பிளாக்(புதியது), டைரியன்வைன், லேசர்ரெட், காஸில் க்ரே, ட்யூ வொயிட், ஜெட்சில்வர் ஆகிய கலர்களிலும் எல்எஸ், எல்எக்ஸ், விஎக்ஸ், இஎக்ஸ் வகை ரகங்களிலும் கிடைப்பதாக கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|