பதிவு செய்த நாள்
14 டிச2013
16:48

சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின், அனைத்து கால கடன்களுக்கு, 3 சதவீதம் வட்டியை, மானியமாக வழங்குவதை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபையில், ஏப்ரல், 19ம் தேதி, தொழில் துறை மானிய கோரிக்கை மீதான, பதில் உரையின்போது, 'தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம், கடன் பெறும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான, 3 சதவீத வட்டி மானிய திட்டம், மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். 'டிக்' வழங்கும் அனைத்து கால கடன்களுக்கும், இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். இதற்கு, 2013 - 14ல், அரசு, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்' என, அறிவிக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்த, உரிய ஆணை வெளியிடும்படி, 'டிக்' தலைவர், அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை பரிசீலித்த அரசு, வட்டி மானியம் வழங்குவதை, மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்தும், திட்டத்தின் செயல்பாடுகளை, ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என, தெரிவித்தும், அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|