பதிவு செய்த நாள்
14 டிச2013
16:54

தமிழகத்தில், 2.25 லட்சம் ஏக்கரில், காய்கறி விளைச்சலை பெருக்க, விதைகளை, 50 சதவீத மானியத்தில் வழங்க, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காய்கறி விளைச்சலை பெருக்க, அரசானது, "காய்கறி பெருக்கு திட்டத்தை' அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், அவரை, புடலங்காய், பாகற்காய், பீட்ரூட் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளின் விதைகள், விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இந்த விதைகள் எல்லாம், அதிக விளைச்சல் தரக்கூடிய, வீரிய ஒட்டுரகத்தை சேர்ந்தவை. வெளிமார்க்கெட்டில் இதன் விலை அதிகம். அதனால், அதிக எண்ணிக்கையில், சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒரு விவசாயிக்கு, அதிகபட்சம், 1.5 ஏக்கருக்கு மட்டுமே விதைகள் வழங்கப்படும். அத்துடன், 50 சதவீத மானியத்தில், வீரிய ஒட்டுரக பழச்செடிகளும் வழங்கப்படுகின்றன. பழச்செடிகளை, 2.4 ஏக்கர் அளவுக்கு, விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுக்காக, தமிழக அரசு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரிலும், ஈரோட்டில், 8,500 ஏக்கர், கடலூரில், 8,000 ஏக்கரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல், அனைத்து மாவட்டங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|