பதிவு செய்த நாள்
15 டிச2013
00:22

மும்பை:நாட்டில், 40 வங்கிகளின் வசூலாகாத கடன், சென்ற செப்டம்பர் நிலவரப்படி, 36.95 சதவீதம் அதிகரித்து,2.29 லட்சம் கோடிரூபாயாக அதிகரித்துள்ளது.இது,சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 1.67 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 40 வங்கிகளில், 10 வங்கிகளின் வசூலாகாத கடன், அவை, வழங்கிய கடனில், 5 சதவீதத்திற்கும் அதிகமாகும். இதில், எட்டு வங்கிகள், பொதுத் துறை வங்கிகளாகும்.கடன்மறுசீரமைப்பு காரணமாகத்தான், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது.மறுசீரமைக்கப்பட்ட கடன்களில், குறைந்தபட்சம், 10–20 சதவீதம் வசூலாகாத கடன்களாக மாறிவிடுகின்றன என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள், 2.70 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை மறு சீரமைத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிப்பு, வட்டி குறைப்பு ஆகியவற்றுடன், ஒரு சிலகடன்களில் குறிப்பிட்ட தொகையையும் வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன.சென்ற செப்டம்பர் வரையிலான காலாண்டில், வங்கிகளின் மறு சீரமைப்பு கடன் கணக்கில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
இரும்பு மற்றும் உருக்கு, அடிப்படை கட்டமைப்பு, ஜவுளி,மின்சாரம் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் கடன்கள், அதிக அளவில் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப் படுகின்றன.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு, அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே, வங்கிகளின் வசூலாகாத கடன் அளவு குறையும் என, ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|