பென்ஷன் தொகை ரூ.1,000 ஆகிறதுபென்ஷன் தொகை ரூ.1,000 ஆகிறது ... 2 நாட்களில் தங்கம்சவரனுக்கு ரூ.216 வீழ்ச்சி 2 நாட்களில் தங்கம்சவரனுக்கு ரூ.216 வீழ்ச்சி ...
ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
15:55

குடிசை மின் இணைப்புகளுக்கு, ஒரு பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், சி.எப்.எல்., பல்புகளை விற்பனை செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தினசரி, 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மின் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, எரிசக்தி திறனூக்க செயலகம் சார்பில், 'பச்சத் லேம்ப் யோஜனா' என்ற, விளக்கு மூலம் மின்சாரம் சேமிப்பு என்ற திட்டம், 2009, பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மீட்டர் பொருத்தப்பட்ட, வீட்டு மின் நுகர்வோருக்கு, திறன் குறைந்த குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, சி.எப்.எல்., பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், அதிகபட்சம், நான்கு பல்புகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில், மின்சார வாரியம் சார்பில், 2010 செப்டம்பரில், முதல் கட்டமாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில், 1,167 வீட்டு மின் நுகர்வோருக்கு, தலா, 15 ரூபாய் விலையில், சி.எப்.எல்., பல்புகள் விற்பனை செய்யப்பட்டன. சி.எப்.எல்., பல்பு தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான, 'பாஸ்பரஸ்' விலை உயர்ந்ததால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இந்நிலையில், 14.62 லட்சம் மீட்டர் பொருத்தப்பட்ட, குடிசை மின் இணைப்புகளுக்கு, 15 ரூபாய் விலையில், சி.எப்.எல்., பல்பு விற்பனை செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 14.62 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. முதலில், இத்திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தவும், பின் படிப்படியாக, அனைத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுத்தவும், மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு துறை நிதி நிறுவனங்களிடம் இருந்து, நிதியுதவி பெற்று, 100 ரூபாய் அடக்க விலை கொண்ட, ஒரு சி.எப்.எல்., பல்பு, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

100 மணி நேரம் ஒரு யூனிட்: வீடுகளில் பயன்படுத்தப்படும், 100 வாட்ஸ் குண்டு பல்பு, 10 மணி நேரம் எரிந்தால், ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதேசமயம், 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு, 100 மணி நேரம் எரிந்தால் மட்டுமே, ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)