பதிவு செய்த நாள்
21 டிச2013
00:09

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சிறிய அளவில் உயர்ந்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.11ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 7 காசுகள் உயர்ந்து, 62.04ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 29 காசுகள் சரிவடைந்து, 62.40ஆக உயர்ந்தது.வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவில் டாலரை வாங்கியதால், அதற்கான தேவை அதிகரித்தது. இதனால், டாலர் மதிப்பு உயர்ந்தது.
எனினும், இந்திய பங்குச் சந்தைகளில், தொடர்ந்து குவிந்து வரும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு காரணமாக, ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து மீண்டது. அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், முதல் மூன்று இடங்களில், இந்தோனேஷியா (ருப்யா), ஜப்பான் (யென்), இந்தியா (ரூபாய்) ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|