பதிவு செய்த நாள்
21 டிச2013
00:23

புதுடில்லி:நடப்பு 2013 – 14ம் பருவத்தில் (அக்., – செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.44 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.
நிலுவை தொகை:விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை பிரச்னையால், சர்க்கரை அதிகளவில் உற்பத்தியாகும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கரும்பு அரவை வெகுவாக சரிவுஅடைந்திருந்தது.இதற்கு எடுத்துக்காட்டாக, இம்மாதம், 15ம் தேதி வரையிலுமாக, உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி, 24.20 லட்சம் டன் என்ற அளவில்தான் இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, ௫௦ சதவீதம் குறைவாகும்.
இருப்பினும், தற்போது, சர்க்கரை உற்பத்தி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 2011 – 12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி மிகவும் அதிகபட்சமாக, 2.63 கோடி டன்னாக இருந்தது.இது, கடந்த பருவத்தில், 2.57 கோடி டன்னாக சற்று குறைந்திருந்தது.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, தேவைக்கும் (2.35 கோடி டன்) அதிகமாக இருப்பதால், இதன் விலை கட்டுக்குள் உள்ளது.இம்மாதம் 15ம் தேதி வரையில், உள்நாட்டில், 426 ஆலைகள் சர்க்கரை உற்பத்தியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலத்தில், 457 ஆலைகள் இதன் உற்பத்தியில் ஈடுபட்டன.15ம் தேதி வரையிலுமாக, 1.28 கோடி டன் கரும்பு அரைக்கப்பட்டு உள்ளது. இதில், மகாராஷ்டிராவில் மட்டும், 12 லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதை விட, 35 சதவீதம் குறைவாகும்.
மகாராஷ்டிரா:மகாராஷ்டிரா மாநிலத்தில், 150 ஆலைகள் மட்டுமே சர்க்கரை உற்பத்தியில், ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலத்தில், இம்மாநிலத்தில், 155 ஆலைகள் செயல்பட்டன.கணக்கீட்டு காலத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில், இந்த எண்ணிக்கை, 114லிருந்து 110 ஆக குறைந்து உள்ளது என, சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|