பதிவு செய்த நாள்
21 டிச2013
00:33

புதுடில்லி;நாட்டின் கனிமங்கள் உற்பத்தி மதிப்பு, சென்ற அக்டோபர் மாதத்தில், 16,412 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 16,975 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.நிலக்கரி மற்றும் இரும்புத்தாது உற்பத்தி மிகவும் சரிவடைந்து போனதே, மதிப்பீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த கனிமங்கள் உற்பத்தி மதிப்பு குறைந்துள்ளதற்கு முக்கிய காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, மிகவும் அதிகபட்சமாக, 5,804 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, நிலக்கரி உற்பத்தி மதிப்பு , 5,310 கோடி ரூபாயாகவும், இரும்புத்தாது உற்பத்தி மதிப்பு, 2,088 கோடி ரூபாயாகவும் உள்ளன. மேலும், இயற்கை எரிவாயு, 1,837 கோடி ரூபாய் மதிப்பிற்கும், சுண்ணாம்புக்கல் மற்றும் பழுப்பு நிலக்கரி முறையே, 386 கோடி மற்றும் 358 கோடி ரூபாய் மதிப்பிற்கும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
ஒட்டு மொத்த கனிமங்கள் உற்பத்தி மதிப்பில், மேற்கண்ட ஆறு கனிமங்களின் பங்களிப்பு மட்டும், 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், நிலக்கரி உற்பத்தி, அளவின் அடிப்படையில், 426 லட்சம் டன்னாக உள்ளது. மேலும், பழுப்பு நிலக்கரி, 29 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி, 287 கோடி கன மீட்டராகவும், பெட்ரோலியம் (கச்சா) உற்பத்தி, 32 லட்சம் டன்னாகவும், இரும்புத்தாது உற்பத்தி, 100 லட்சம் டன்னாகவும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|