பதிவு செய்த நாள்
21 டிச2013
00:40

புதுடில்லி:ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், அதன் கார்களின் விலையை, 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துகிறது.'மூலப் பொருட்களின் செலவு அதிகரித்துள்ளதால், வரும் ஜனவரி முதல், அனைத்து கார்களின் விலை, 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படும்' என, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் பி.பாலேந்திரன் தெரிவித்தார்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ‘பீட்’, ‘ஸ்பார்க்’, ‘கேப்டிவா’ உள்ளிட்ட பல வகையான கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை, 3.33 லட்சம் முதல், 25.71 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வார துவக்கத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அதன் கார்களின் விலையை, வரும் ஜனவரியில், 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|