பதிவு செய்த நாள்
21 டிச2013
00:55

புதுடில்லி;நடப்பு 2013–14ம் நிதியாண்டின் முதல் எட்டு மாத (ஏப்., – நவ.,) காலத்தில், 164 கோடி டாலர் (9,840 கோடி ரூபாய்) மதிப்பிற்கு யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில், யூரியா இறக்குமதி, 57.50 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 54.10 லட்சம் டன்னாக இருந்தது.மதிப்பு:சென்ற 2012–13ம் நிதியாண்டில், 294 கோடி டாலர் மதிப்பிற்கு, 80.40 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், யூரியா விலை, சராசரியாக, டன்னுக்கு, 50 டாலர் குறைந்து உள்ளது. இதன் காரணமாகவே, யூரியா இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில் சரிவை கண்டுள்ளது என, இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் தலைவர் பி.எஸ்.கெலாட் தெரிவித்தார்.
இந்தியாவில், யூரியா உரத்திற்கான தேவை, ஆண்டுக்கு, 3 கோடி டன் என்ற அளவில் உள்ளது. ஆனால், உள்நாட்டில், இதன் உற்பத்தி, 2.20 கோடி டன் என்ற அளவிற்கே உள்ளது.
பரப்பளவு:பருவ நிலை நன்கு இருந்ததையடுத்து, நடப்பு நிதியாண்டில், பயிரிடும் பரப்பளவு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, யூரியாவின் இறக்குமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, மத்திய உரத் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ், டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகியவற்றின் இறக்குமதி, 40.10 லட்சம் டன்னை எட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|