பதிவு செய்த நாள்
23 டிச2013
00:27
மும்பை:ரிசர்வ் வங்கி, விரைவில், ரூபாய்க்கான குறியீட்டுடன், ‘ஆர்’ மற்றும் ‘எல்’ எழுத்துகள் கொண்ட, 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.இதன்படி, 10 ரூபாய் கரன்சியின் இரு புறமும், எண் உள்ள பகுதியில், ‘ஆர்’ என்ற எழுத்து இடம்பெறும். அதே போன்று, ‘2005–மகாத்மா காந்தி’ வரிசையில் வெளியிடப்படும், 10 ரூபாய் கரன்சியின் இரு புறமும், எண் உள்ள பகுதியில், ‘எல்’ என்ற எழுத்து இடம் பெறும்.மேலும், இந்த கரன்சிகளில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் கையொப்பமும், அச்சடிக்கப்பட்ட ஆண்டை குறிக்கும் வகையில், ‘2013’ என்ற எண்ணும் இடம் பெற்றிருக்கும்.
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள, ‘2005–மகாத்மா காந்தி’ வரிசையிலான கரன்சிகளை போன்ற வடிவமைப்பிலயே, புதிய கரன்சிகள் இருக்கும்.புதிய கரன்சிகளுடன், கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட, 10 ரூபாய் கரன்சிகள் அனைத்தும், சட்டபூர்வமாக செல்லத்தக்கவை என, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|