பதிவு செய்த நாள்
28 டிச2013
02:32

புதுடில்லி: நடப்பு டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலத்தில், உள் நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 59.75 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.77 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
விளை பொருட்கள்:இது,கடந்தாண்டின்இதே காலத்தில், 6.89 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப் பட்ட வர்த்தகத்தை விட, 35.41 சதவீதம் சரிவு அடைந்து, 123.16 லட்சம் கோடியிலிருந்து, 79.55 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
நடப்பு மாதத்தின் முதல் 15 தினங்களில், வேளாண் விளை பொருட்கள் மீதான வர்த்தகம், கடந்தாண்டின் இதே காலத்தை விட, 33.88 சதவீதம் சரிவடைந்து, 16.28 லட்சம் கோடியிலிருந்து, 10.77 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், தங்கம் வெள்ளி உள்ளிட்ட மதிப்பு மிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், 66.55 சதவீதம் குறைந்து, 3.22 லட்சம் கோடியிலிருந்து, 1.08 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
எரிசக்தி:இதர உலோகங்கள் மீதான வர்த்தகமும், 69.99 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.24 லட்சம் கோடியிலிருந்து, 37,208 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எரிசக்தி மீதான வர்த்தகம், 56.62 சதவீதம் குறைந்து, 1.50 லட்சம் கோடியிலிருந்து, 65,215 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, எப்.எம்.சி., அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|