பதிவு செய்த நாள்
28 டிச2013
17:25

சென்னை: டாஸ்மாக்' நிறுவனம், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, ரமி மாலில், மூன்றாவது, "ஹைடெக்' மதுபான கடையை திறந்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 6,834 டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. தனிமை விரும்பிகள், உயர் வருவாய் பிரிவினர், "டாஸ்மாக்' கடைகளில், விரும்பிய சரக்குகளை வாங்குவதில் சிரமப்பட்டு வந்தனர். இதை தவிர்க்கும் வகையில், இவர்களின் வசதிக்காக, சென்னை, எழும்பூரில் உள்ள, அல்சா மாலில் "ஹைடெக்' டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, வேளச்சேரியில் உள்ள, பீனிக்ஸ் மாலில், இதே போன்ற கடையை, "டாஸ்மாக்' நிறுவனம், சில நாட்களுக்கு முன் துவங்கியது.
பொதுமக்கள், மற்ற கடைகளைப் போல் இல்லாமல், "ஹைடெக்' டாஸ்மாக் கடைகளில், தாங்கள் விரும்பிய சரக்குகளை தேர்வு செய்து வாங்கும் வசதி உள்ளதால், வரிசையில் நின்று, மது வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், மூன்றாவது "ஹைடெக்' மதுபான கடையை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, ரமி மாலில், "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று துவக்கியது.
கேமரா மூலம் கண்காணிப்பு : ஷாப்பிங் மால்களில், இயங்கி வரும், "டாஸ்மாக்' கடைகளுக்கு, மது விற்பனை எதிர்ப்பாளர்களால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கவும், அவர்களை கண்டுபிடிக்கவும், மால்களில் உள்ள, "டாஸ்மாக்' கடையைச் சுற்றிலும், உள்ளேயும், வெளியேயும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|