பதிவு செய்த நாள்
28 டிச2013
17:29

நாமக்கல்: ஜனவரி, 1ம் தேதி முதல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும்,'' என, ஆலோசனை கூட்டத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் செல்வராஜ் கூறினார்.
நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் செல்வராஜ் பேசியதாவது: பிற மாநிலங்களில், புதிதாக கோழிப்பண்ணைகள் உருவாகி வருகின்றன. இதனால், தமிழகத்தில் உற்பத்தி செய்யும் முட்டைகளை, தமிழகத்திலேயே, விற்பனை செய்யும் நிலை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால், ஜன., 1ம் தேதி முதல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். குறைத்து விற்பனை செய்யக்கூடாது. அதேபோல், வியாபாரிகளும், குறைந்த விலைக்கு முட்டை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவற்றை, பண்ணையாளர்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறிய, 10 கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணயம் செய்யும்போது, சிறு சிறு பிரச்னைகள் வரத்தான் செய்யும். பண்ணையாளர்கள் ஒற்றுமையாக இருந்து, விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|