ஐந்து துறை­மு­கங்கள் விரி­வாக்கம் : திட்ட மதிப்பு ரூ.17,630 கோடிஐந்து துறை­மு­கங்கள் விரி­வாக்கம் : திட்ட மதிப்பு ரூ.17,630 கோடி ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.91 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.91 ...
மத்­திய அரசின் வருவாய் இலக்கு எட்­டப்­ப­டாது :ரூ.90 ஆயிரம் கோடி பற்­றாக்­குறை ஏற்­படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
05:05

புது­டில்லி: நடப்பு 2013–14ம் நிதி­ஆண்டில், மத்­திய அரசு நிர்­ண­யித்­துள்ள வருவாய் இலக்கு எட்ட வாய்ப்­பில்லை என, பல்­வேறு ஆய்­வா­ளர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.வருவாய் இலக்கு எட்­டப்­ப­டாத நிலையில், மத்­திய அரசின் நிதி பற்­றாக்­குறை அதி­க­ரிக்கும். எனவே, செல­வி­னங்­களை குறைப்­பதை தவிர, அர­சுக்கு வேறு வழி கிடை­யாது.மறைமுக வரிநடப்பு நிதி­யாண்டில், நேரடி மற்றும் மறை­முக வரிகள் வாயி­லாக, 12.36 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், ஏப்ரல் முதல் அக்­டோபர் வரை­யி­லான ஏழு மாத காலத்தில், வருவாய் இலக்கில், 43 சத­வீதம் மட்­டுமே, எட்­டப்­பட்­டுள்­ளது.
மீத­முள்ள, 57 சத­வீ­தத்தை, நவம்பர் முதல் மார்ச் வரை­யி­லான ஐந்து மாத காலத்தில், எட்ட முடி­யாது என்றும் ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.நடப்பு நிதி­யாண்டில், மத்­திய அரசு, பொதுத் துறை நிறு­வ­னங்­களில் கொண்­டுள்ள மொத்த பங்கு மூல­த­னத்தில், குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்­வதன் மூலம், 54 ஆயிரம் கோடி ரூபாய் (இந்­துஸ்தான் ஸிங்க்– எச்.இசட்.எல்., மற்றும் பால்கோ ஆகிய நிறு­வ­னங்­களில் மீத­முள்ள பங்கு விற்­பனை உட்­பட) திரட்ட இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.ஆனால், இது­வரை, பொதுத் துறை நிறு­வனப் பங்­குகள் விற்­பனை மூலம், 3,000 கோடி ரூபாய் மட்­டுமே திரட்­டப்­பட்­டுள்­ளது.எச்.இசட்.எல்., மற்றும் பால்கோ ஆகிய நிறு­வ­னங்­களில் மீத­முள்ள பங்­கு­களை விற்­பனை செய்­தாலும், 14 ஆயிரம் கோடி­ ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
எனவே, பொதுத் துறை பங்கு விற்­ப­னையில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக பற்­றாக்­குறை ஏற்­படும். வரி வருவாய் இலக்கில், 70 ஆயிரம் கோடி ரூபாய் பற்­றாக்­குறை ஏற்­படும், ஆக, ஒட்டு மொத்த அளவில், 90 ஆயிரம் கோடி ரூபாய் அள­விற்கு வருவாய் பற்­றாக்­குறை ஏற்­படும்.நிதி பற்றாக்குறைநடப்பு நிதி­யாண்டில், நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நிதி பற்­றாக்­குறை, 4.8 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உய­ராத வகையில், நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என, நிதி அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.ஆனால், தயா­ரிப்பு துறையில் ஏற்­பட்­டுள்ள சுணக்க நிலை மற்றும் நிறு­வ­னங்­களின் செயல்­பாடு நன்கு இல்­லா­தது போன்­ற­வற்றால், பொரு­ளா­தார தேக்க நிலை தொடர்ந்து நீடிக்கும் என்ற கருத்தும் உள்­ளது.
நிறு­வ­னங்­களின் செயல்­பாடு மந்த கதியில் உள்­ளதால், அர­சுக்கு அதி­க­ளவில் வரி வருவாய் வரக்­கூ­டிய நிறு­வ­னங்கள் செலுத்தும் வரியும் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.பொரு­ளா­தார மந்த நிலையால், நிறு­வ­னங்கள் விரி­வாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல் உள்­ளன. இதன் கார­ண­மாக, பொறி­யியல் சாத­னங்கள் மற்றும் இயந்­தி­ரங்கள் இறக்­கு­ம­தியும், குறைந்­துள்­ளது. இது, சுங்க வரி வசூலில் தாக்­கத்தை ஏற்ப்­ப­டுத்­தி­ உள்­ளது.
தற்­போ­தைய நிலையில், உள்­நாட்டில், வேளாண் துறை தவிர்த்த ஏனைய அனைத்து துறை­களின் செயல்­பாடு குறிப்­பிட்டு சொல்­லும்­படி இல்லை.வருவாய் இலக்கு எட்­டப்­ப­டாத நிலையில் மத்­திய அரசு, அதன் பல்­வேறு செல­வி­னங்­களை குறைக்கும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை­வாய்ப்பு திட்டம், இந்­திரா அவாஸ் யோஜனா ஆகிய திட்­டங்­க­ளுக்­கான செல­வினம் கணி­ச­மாக குறைக்­கப்­பட வாய்ப்­புள்­ளது. மேலும், இது­வரை, இத்­திட்­டங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட தொகையில், குறிப்­பி­டத்­தக்க அள­விற்­கான தொகை செல­வி­டப்­ப­டாமல் இருப்­பதும் இதற்கு காரணம்.
பொருளாதார வளர்ச்சி:மத்­திய அரசு, அதன் வரு­வாயை அதி­க­ரிக்கும் வகையில், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக, பொதுத் துறை நிறு­வ­னங்கள், கடந்­தாண்டை விட, நடப்­பாண்டில் கூடு­த­லாக டிவி­டெண்டு மற்றும் சிறப்பு டிவி­டெண்டு வழங்க வேண்டும் என, வலி­யு­றுத்தி வரு­கி­றது.கடந்­தாண்டை விட, நடப்­பாண்டில், வருவாய் பற்­றாக்­குறை அதி­க­ரிக்கும் நிலையில், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5 சத­வீ­தத்­திற்கும் மேல் அதி­க­ரிக்க வாய்ப்­பில்லை என, பொரு­ளா­தார நிபு­ணர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)