பதிவு செய்த நாள்
02 ஜன2014
11:47

சேலம்: தமிழகத்தில், புது அரிசி வரத்து துவங்கி விட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், நெல் வரத்து அதிகமாக காணப்படுகிறது. மேட்டூர் அணை தண்ணீரால், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியும், தென் மாவட்டங்களில், அதிக அளவில் நெல் விளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், நடப்பாண்டு மழை பெய்துள்ளதால், நெல் வரத்து அதிகமாக காணப்படுகிறது. கடந்த, இரண்டு மாதமாக, அரிசி விலை, சீரான நிலையே காணப்படுகிறது. மத்திய பிரதேசத்தில், ஜபல்பூர், டாப்ரா, குவாலியர் போன்ற இடங்களில், எதிர்பார்த்ததை விட, அதிகளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, "கிராந்தி' என்ற, கார் வகை நெல், அதிகளவில் வருகிறது.
மொத்த அரிசி விலை நிலவரம்
ரகம் பழசு கிலோ ரூபாயில் புதுசு
பி.பி.டி., 42 34
ஏ.டி.டி., 43 32 29
அம்பை 16 32 29
கர்நாடகா டீலக்ஸ் 50 40
கட்டாகார் இட்லி அரிசி 34 32
சேலம் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் சியாமளநாதன் கூறியதாவது: தமிழக டெல்டா பகுதி, கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், நெல் வரத்து உள்ளது. தற்போது, புது அரிசி வரத்து துவங்கி விட்டது. தமிழக மக்கள் அதிகம் பேர், வெள்ளை பொன்னி, பி.பி.டி., கர்நாடக டீலக்ஸ் அரிசிகளை வாங்குகின்றனர். அடுத்ததாக, ஏ.டி.டி., 45, ஏ.டி.டி., 36, ஐ.ஆர்., 50, ஏ.டி.டி., 43 ஆகிய அரிசிகளையே வாங்குகின்றனர். நுகர்வோர், புது அரிசியை வாங்கி, இருப்பு வைக்க துவங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|