பதிவு செய்த நாள்
02 ஜன2014
15:27

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.09 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பட்ஜெட் இலக்கு
இது, நடப்பு முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் இலக்கில், 93.9 சதவீதம் என, மத்திய தலைமை கணக்கு ஆணையம் தெரிவித்துள்ளது. நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. மத்திய அரசின் வருவாயை விட, செலவினங்கள் அதிகரிக்கும் போது ஏற்படும் இடைவெளியே, நிதி பற்றாக்குறையாகும். கணக்கீட்டு காலத்தில், மத்திய அரசின் திட்டமிடப்படாத செலவினங்கள் (வட்டி செலவினம், மானியங்கள்) அதிகரித்ததை அடுத்து, நிதி பற்றாக்குறை உயர்ந்துள்ளது; திட்டச் செலவும் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், அரசின் வரி வருவாய், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 47.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின், இதே காலத்தில், 44.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
நிதி பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.43 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு இருக்க வேண்டும் என, அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், முதல் எட்டு மாதங்களிலேயே, நிதி பற்றாக்குறை, 93.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 80 சதவீதம் என்ற அளவில் சற்று குறைந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|