பதிவு செய்த நாள்
02 ஜன2014
17:11

மும்பை : 2014ம் ஆண்டு துவக்கமே முதலீட்டாளர்களுக்கு சரிவை கொடுத்துள்ளன இந்திய பங்குசந்தைகள். சென்செக்ஸ் நேற்று 30 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று(ஜனவரி 2ம் தேதி) 252 புள்ளிகள் சரிந்து, 21 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. இதனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 252.15 புள்ளிகள் சரிந்து 20,888.33-ஆகவும், நிப்டி 80.50 புள்ளிகள் சரிந்து 6,221.15-ஆகவும் இருந்தன.
சமீபத்தில் வெளியான பொருளாதார கணிப்பில் 2013ம் ஆண்டு சென்செக்ஸ் 9 சதவீதம் உயர்ந்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் இன்று துவக்கத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகளின் ஏற்றம் பின்னர் சரிய தொடங்கின. குறிப்பாக முக்கிய நிறுவன பங்குகளான ரிலையன்ஸ், ஐடிசி., ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய வர்த்தகநேர இறுதியில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டிசிஎஸ்., இன்போசிஸ், சன்பார்மா உள்ளிட்ட ஐந்து நிறுவன பங்குகள் தவிர்த்து மற்ற 25 நிறுவன பங்குகளின் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|