பதிவு செய்த நாள்
03 ஜன2014
12:07

மும்பை : வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. தற்போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகவும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்த ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெங்களூரில், ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்த வங்கி பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக சில விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
இந்நிலையில் வங்கிகள் தங்களின் ஒரு ஏ.டி.எம். மையங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40,000 வரை செலவு செய்வதாக கூறி வருகிறது. பல ஏ.டி.எம். மையங்களில் போதுமான பண பரிவர்த்தனை நடைபெறாததால் அதற்காக மேற்கொள்ளப்படும் செலவு விரயமாக இருப்பதாக வங்கிகள் கருதுகிறது. இதனால் சில வங்கிகள் இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஏ.டி.எம். மையங்களை மூடவும் முடிவு செய்துள்ளன. இதற்கிடையே தற்போது ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் பராமரிப்பு செலவு இன்னும் கூடுதலாக இருக்கும் என கருதும் வங்கிகள் இனி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும் போது அதற்கு கட்டணம் வசூலித்து இந்த பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்யலாம் என்று கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|