பதிவு செய்த நாள்
03 ஜன2014
12:57

புதுடில்லி : கடந்த ஒன்பதரை ஆண்டுகள் பிரதமராக இருந்து வரும் மன்மோகன் சிங், மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து அவர் பேசியதாவது, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்துள்ளது. இந்த காலங்கட்டங்களில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் வந்தபோதும் அதை இந்த அரசு சமாளித்துள்ளது. இந்தியாவின் சிறப்பான பொருளாதார கொள்கைகளால் நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியது. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதார சூழல் சரியாக இல்லாததால் நாட்டின் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உணவு பொருட்களின் விலை கடுமையாக உயந்ததே பணவீக்கம் உயர காரணமாக அமைந்தது. உணவு பொருட்களின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கைகள் தேவை. அதேசமயம் பணவீக்கம் உயர்ந்தாலும் மக்களின் வருமானம் பணவீக்கத்தை விட உயர்ந்துள்ளது.
தற்போது உலக பொருளாதார சூழல் சாதகமாக மாறியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நாமும் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழிற்சாலைகளில் மட்டும் வேலைவாய்ப்பை அதிகரிக்காமல் சிறு மற்றும் குறுந்தொழில்களிலும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். மானிய விலைக்கான சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|