பதிவு செய்த நாள்
03 ஜன2014
16:57

மும்பை : வாரத்தின் கடைசி நாளில் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. கடந்த இருதினங்களாக 289 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் இன்று மேலும் 37 புள்ளிகள் சரிந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 20,851.33-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 6,211.15-ஆகவும் முடிந்தன.
ஆட்டோ மொபைல் துறையில் சரிவு காணப்படுவதால் அது தொடர்பான பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன. மேலும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவும் இந்திய பங்குசந்தைகளுக்கான சரிவுக்கு காரணமாக அமைந்தது. அதேசமயம் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவன பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன.
இன்றைய வர்த்தகத்தில் எல்அண்ட்டி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட 19 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், இன்போசிஸ், உள்ளிட்ட 11 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|