பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வுபெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு ... அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
2014-ல் கலக்க வரும் வாகனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
14:19

ஹோண்டா சிட்டி: ஹோண்டா இந்தியா நிறுவனம், 2014, ஜனவரி 7ம் தேதி, புதிய ஹோண்டா சிட்டி காரை அறிமுகப்படுத்துகிறது.

டாடா நேனோ ட்விஸ்ட்: ஜனவரி 2வது வாரம், டாடா நிறுவனம், டாடா நேனோ ட்விஸ்ட் மாடலை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாடலில் இசட்எப் எலக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் யூனிட் போடப்பட்டு வருகிறது.

டிவி.எஸ் ஸ்கூட்டி: இந்திய பெண்களின் மனம் கவர்ந்த, டிவிஸ் ஸ்கூட்டியின், புதிய மாடல், அழகிய பக்க வாட்டு கண்ணாடி, முன்புற டெலஸ்கோப்பிக், "போர்க் சஸ்பென்ஷன்' உடன் பின்புறம், அகலமான சீட், "ஷாக் அப்சர்பர்' கொண்டும், புதிய ஸ்கூட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

டேட்சன் கோ: நிசான் நிறுவனம், டேட்சன் பிராண்டை, மீண்டும் கொண்டு வந்துள்ளது. இரண்டு முன்புற சீட்களும், நடுவில், குஷன் இருக்கையும், சாய்ந்து கொள்ளும் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன், 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும், பராமரிக்க எளிதானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஜாஸ்: புதிய ஹோண்டா ஜாஸ், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் ஐவி-டிஇஎல் பெட்ரோல் இன்ஜின் கொண்டு, இரண்டு இன்ஜின் தேர்வுகளில் வர உள்ளன. வெளிப்புற தோற்றம் மிகவும் கவர்ச்சியான வடிவமைப்பில், அதிக உட்புற இடவசதியும், பொருட்கள் வைக்க அதிக இடத்துடனும், புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா இண்டிகா விஸ்டா: டாடா இண்டிகா விஸ்டா பல புதிய மேம்பாடுகளுடன், முன்புறம் புதிய தோற்றத்துடனும், அதிக அம்சங்கள் கொண்ட உட்புற வடிவமைப்புடனும் வர உள்ளது.

ஜீப் ரேங்க்ளா: ஆல் வீல் டிரைவிற்கு உலகெங்கும் பெயர் பெற்ற பிராண்ட் ஜீப் ரேக்ளா பியட் நிறுவனம், இந்த சொசுகு காரை இந்திய வாகன சந்தைக்கு வரும் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஆடி டிடி ரோட்ஸ்டர்: ஆடி, டிடி கூப்பேயை தொடர்ந்து, ஆடி, டிடி ரோட்ஸ்டர் அறிமுகமாக உள்ளது. "சாப்ட் டாப்' என்ற கூரையுடன் வரும், இந்த சொகுசு கார் தானியங்கியாகவும் சிறப்பாக இயங்குகிறது. வண்டி மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும், 12 நொடியில் முழுதாய் திறந்து கொள்ளும் வகையில், இதன் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாகனங்களுடன் டாடா ஆரியா ஏடி, பியட் புலர்டோ, நிசான், ஜிடிஆர் ஸ்கோடா சூப்பர்ப், ஆடிஏ3, மாருதி செல்ரிட்டோ போன்றவையும், பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)