பதிவு செய்த நாள்
06 ஜன2014
15:34

நாமக்கல்: புதிய நடைமுறையால், 20 சதவீதம் முட்டை விற்பனை அதிகரித்துள்ளது என, கருத்தரங்கில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மண்டலத் தலைவர் பேசினார். நாமக்கல் தெற்கு பகுதி கோழிப் பண்ணையாளர் கருத்தரங்கு, அணியாபுரம் அடுத்த தோளூரில், நேற்று நடந்தது. இதில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மண்டலத் தலைவர், செல்வராஜ் பேசியதாவது: ஜனவரி, 1ம் தேதி முதல், நிக் நிர்ணயிக்கும் விலைக்கே, அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், முட்டையை, வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. அதற்கு, பெரும்பாலான பண்ணையாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
இந்த புதிய முறையை அமல்படுத்தியதால், தற்போது, 20 சதவீதம் வரை, முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், தீவனத்தின் தேவையும் குறைந்துள்ளது. புதிய முறை நடைமுறையால், நாமக்கல் மண்டலத்தில், 3.60 காசுகளுக்கு ஒரு முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பண்ணையாளர்களுக்கு, 15 காசுகள் கூடுதலாக கிடைக்கிறது. கேரளாவில், முட்டைக் கோழிகளை, பிரியாணிக்கு பயன்படுத்துகின்றனர். நாமும் இங்கு, அவற்றை, பிரியாணிக்கு பயன்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|