பதிவு செய்த நாள்
06 ஜன2014
15:46

புதுடில்லி : ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் 12.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 9 மாதங்களில் ரூ.4.81 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2012-13 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.4.29 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2013-14ம் ஆண்டில் ரூ.6.68 லட்சம் கோடி நேரடி வரி வசூல் செய்ய வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 19 சதவீதமாகும்.
இந்த 9 மாத காலங்களில், தொழில்துறை நிறுவனங்களின் வரி வசூல் 9.35 சதவீதம் உயர்ந்து ரூ.3.1 லட்சம் கோடியாகவும், தனிநபர் வரி வசூல் 18.53 சதவீதம் உயர்ந்து 1.67 லட்சம் கோடியாகவும், சொத்து வரி 11.92 சதவீதம் உயர்ந்து ரூ.742 கோடியாகவும், எஸ்.டி.டி. வரி வசூல் 3,427 கோடியும் வசூலாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|