பதிவு செய்த நாள்
09 ஜன2014
00:08

சென்னை:ஏராளமான வியாபாரிகள், கூரியர் மூலம், தேயிலையை வெளிநாடுகளுக்கு அனுப்பி, டாலருக்கு பதிலாக, பிட்காய்ன் பெற்று வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏதும் செலுத்தாமல் நடைபெறும், இந்த வியாபாரத்தில், 1.5 கிலோ தேயிலைக்கு, 1,100 டாலர் (66 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள, பிட்காய்ன்கிடைப்பதாக கூறப்படுகிறது.கொழுத்த லாபம் தரும் இத்தொழிலில், சிறிய அளவில் தேயிலை தோட்டம் வைத்துள்ள பண்ணையாளர்களும் ஈடுபடதுவங்கியுள்ளனர். சர்வதேச, கூரியர் நிறுவனம் மூலம், விமானத்தில் அனுப்பும், 4 கிலோ எடையுள்ள, எந்த பொருளும் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப் படுவதில்லை.
இதை பயன்படுத்தி, சிறிய அளவில் தேயிலை பொட்டலங்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி, ஏராளமானோர், பிட்காய்ன்பெற்று வருகின்றனர். இடைத் தரகரின்றி, ஏற்றுமதியாளரும், இறக்குமதியாளரும் நேரடியாக வர்த்தகம் புரிவதால், இருதரப்பினரும் பயனடைகின்றனர். பிட்காய்ன் பரிமாற்றத்திற்கென, பிட்பிளே, மேடோவர்காய்ன்ஸ் போன்ற வலைதளங்கள் உள்ளன. இவை, பொருளின் மதிப்பில், ஒரு சதவீதத்தை
பரிமாற்றக் கட்டணமாக வசூலிக்கின்றன.
இதனிடையே, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும், பிட்காய்ன் வாயிலான தேயிலை வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தில் புழங்கும், பிட்காய்ன் கரன்சியை பயன்படுத்த வேண்டாம் என, அண்மையில், ரிசர்வ் வங்கி எச்சரிக்கைவிடுத்தது. இதையடுத்து, பல நிறுவனங்கள், இத்தகைய வர்த்தகத்தை நிறுத்தி உள்ளன.இந்நிலையில், இந்திய நிறுவனமொன்று, 'லஷ்மிகாய்ன்' என்ற இணையதள கரன்சியை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|