பதிவு செய்த நாள்
09 ஜன2014
10:05

மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்திலேயே சரிவை சந்தித்தது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்ற - இறக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில பங்குகளை தேர்வு செய்து வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 42.10 புள்ளிகளும், தேசிய பங்குசந்தையான நிப்டி 9.55 புள்ளிகளும் உயர்ந்து இருந்தன. பின்னர் சிறிது நேரத்திலேயே சரிவை சந்தித்த பங்குசந்தைகள் 10 மணியளவில் சென்செக்ஸ் 38.43 புள்ளிகள் சரிந்து 20,690.95-ஆகவும், நிப்டி 15.15 புள்ளிகள் சரிந்து 6,159.45-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.05 புள்ளிகள் உயர்ந்தும், ஜப்பானின் நிக்கி 1.28 புள்ளிகள் சரிந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|