தங்கம் - வெள்ளியின் விலை குறைந்ததுதங்கம் - வெள்ளியின் விலை குறைந்தது ... வருங்காலங்களில் பணவீக்கம் சீராகும் - அரவிந்த் மாயாராம் வருங்காலங்களில் பணவீக்கம் சீராகும் - அரவிந்த் மாயாராம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
18 வயதான அனைவருக்கும் வங்கி கணக்கு: ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2014
13:55

புதுடில்லி: நாட்டில், 18 வயது நிரம்பப் பெற்ற அனைவருக்கும், வங்கி கணக்கு வழங்க வகை செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக, ரிசர்வ் வங்கி, சிறு வர்த்தகர்கள், குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினருக்கான நிதி சேவைகள் குறித்து ஆராயும் வகையில், நச்சிகேத் மோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இக்குழு அளித்துள்ள பரிந்துரை: வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள், நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பாதுகாப்பான மின்னணு வங்கி கணக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கணக்கில், பணம் செலுத்துவது, பணம் எடுப்பது உள்ளிட்ட முழு வங்கி சேவையும் இருக்க வேண்டும். இந்த வங்கி சேவை குறைந்த தூரத்தில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த வங்கி கணக்கை துவங்குவதற்கு, ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். இது தவிர, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் மற்றும் வட்டி போன்றவற்றை தள்ளுபடி செய்வதை கைவிட்டு, அதற்கு பதிலாக, இந்த பலன்கள் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு, பரிந்துரை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)