பதிவு செய்த நாள்
09 ஜன2014
14:29

புதுடில்லி : உற்பத்தியை அதிகரித்து, பொருட்களின் விலையை குறைத்தால் வருங்காலங்களில் பணவீக்கம் குறைந்து சீராக இருக்கும் என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.52 சதவீதமாக உயர்ந்தது, இதேப்போல் சில்லரை வர்த்தக பணவீக்கமும் இரட்டை இலக்கை தொட்டு 11.24 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. மேலும் பணவீக்கம் உயர்வு பெரும் கவலையளிப்பதாகவும், அதை தடுக்க முடியவில்லை என்றும் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
இந்நிலையில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர், அரவிந்த் மாயாராம் கூறியுள்ளதாவது, பணவீக்கம் உயர்வு பெரும் கவலை அளிக்கிறது. ஆனால் வருங்காலங்களில் இதுகுறையும். பணவீக்கம் இரட்டை இலக்க விகிதத்தில் இருந்து குறைய கொஞ்சம் நாளாகும். குறிப்பாக நம்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து வேண்டும், மேலும் காய்கறிகளின் விலையும் குறைய வேண்டும், அப்படி குறைகின்ற பட்சத்தில் பணவீக்கம் குறைந்து சீராகும் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|