பதிவு செய்த நாள்
16 ஜன2014
12:52
நான்கு சக்கர வாகனங்களில், ஒரு வேகத்திலிருந்து, "கியரை' மற்றொரு வேகத்திற்கு மாற்றும்போது, "கிளட்ச் பெடலை' மிதிப்பது அவசியம். தற்போது, "ஆட்டோமேட்டட் மானுவல் டிரான்ஸ்மிஷன்' என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளதால், வாகனத்தின் வேகத்தை, கூட்டவோ, குறைக்கவோ நினைக்கும்போது, "கிளட்சை' அழுத்தி, "கியரை' மாற்ற தேவையில்லை. வண்டியிலும், "கிளட்ச் பெடல்' இருக்காது; "கியர்' மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்; அதை மாற்றினால் போதும். "பார்க்கிங், டிரைவிங், ரிவர்ஸ்' என, வண்டியின், "மோட் பட்டனை' மட்டும், மாற்றினால் போதும்.
சில ஓட்டுனர்களுக்கு வண்டியை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஓட்டும் உணர்வு இல்லாமல் போகிறது. இதற்காகவே, "ஆட்டோமேட்டட் "மானுவல் டிரான்ஸ்மிஷன்' என்ற, ஏ.எம்.டி., தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை, நாம் தேவையென்றால் பொருத்திக் கொள்ளும் வகையில், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏ.எம்.டி.,யில் இருப்பது என்ன?
ஓட்டுனர், "கியரை' மாற்றும்போது, "சென்சார்' மூலம், தானாகவே, "கிளட்சை' அழுத்தி வேகத்தை கூட்ட உதவுகிறது. நெருடல் அதிகம் இருக்கும் நகர சாலைகளில், வேகத்தை, உடனுக்குடன் அதிகரிக்கவும், கட்டுப்படுத்தவும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம், "ரேஸ்' கார்கள் மற்றும் சில, குறிப்பிட்ட வகை கார்களில் மட்டும், பயன்பாட்டில் இருந்தது. தற்போது, தேவையையும், பயன்பாட்டை யும் கருதி, பொதுபயன்பாட்டில் இருக்கும் கார்களிலும், பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண வகை கார்களில், முழுவதும், "மானுவல்' அல்லது, முழுவதும், "ஆட்டோமெட்டிக்' மட்டுமே இருந்தது. இப்போது, மற்ற சின்ன மாடல் கார்களிலும், இந்த, ஏ.எம்.டி., இணைக்கப்பட உள்ளது.
ஏ.எம்.டி.,யின் பயன்கள்
* வண்டியின் வேகம் ஓட்டுனரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது.
* "கியரை' மாற்ற, "கிளட்சை' மிதிக்கத் தேவையில்லை.
* தேவையற்ற, "டென்ஷன்' தவிர்க்கப்படுகிறது.
* "மானுவல் டிரான்ஸ் மிஷனை' விட, அதிக சொகுசும், வசதியும் கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|