தங்கம் விலை அதிரடியாக ரூ.192 அதிகரிப்புதங்கம் விலை அதிரடியாக ரூ.192 அதிகரிப்பு ... ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.61.39 ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.61.39 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
4வது தலைமுறை ஹோண்டா சிட்டி கார் சென்னையில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2014
15:18

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், நான்காவது தலைமுறை, ஹோண்டா சிட்டி காரை, சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.ஹோண்டா சிட்டி, செடான் ரக கார் பிரிவில், தனக்கென பிரத்யேகமான இடத்தைப் பிடித்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது, அனைவரும் அறிந்ததே. தற்போது, இக்காரில் மேலும், ரசிக்கத் தகுந்த தோற்றம் தரும் வகையில், வெளிப்புற வடிவமைப்பு, எரிபொருள் சிக்கனம், அபார செயல் திறன்
மற்றும் சிறந்த பாதுகாப்பளிக்கும், பல நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பெட்ரோல்-டீசல் தேர்வுகளில், ஹோண்டா சிட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தனிச் சிறப்பு.

இதன் டீசல் மாடல், எர்த் டிரீம்' தொழில்நுட்பத்துடன், மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறையையும் பின்பற்றுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட, 6 ஸ்பீட், மேனுவல் டிரான்ஸ்மிஷன்' வசதி, கியரை மாற்றும் பணியை, எளிதாக்குகிறது. மேலும், லிட்டருக்கு, 26 கி.மீ., மைலேஜை வழங்குவதாக கூறப்படுகிறது. மனிதர்களுக்கு அதிக இடம் இயந்திரத்திற்கு குறைந்த இடம் என்ற, ஹோண்டாவின் சித்தாந்தத்திற்கு ஏற்ப, பயணிகளுக்கு இதில், அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தலை இடிக்காமல், கால் முட்டிகள் இடிக்காத வண்ணம், தாராள இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய சிட்டியில் பாதசாரிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிகளை பாதுகாக்கும், "ஏர்பேக், ஏ.பி.எஸ்.,' மற்றும் "ஹெட் ரெஸ்ட்' என, பல பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன், "டச் ஸ்கிரின்' மூலம் கட்டுப்படுத்தக்கூடிய, "ஏசி' மற்றும் 5 அங்குல திரை மற்றும் 8 ஸ்பீக்கர் கொண்ட இசைக் கருவி, ஒரே தொடுதல் மூலம், "ஸ்டார்ட், ஸ்டாப்' செய்யும் வசதி, "ஸ்டிரியரிங்'கில் கொடுக்கப்பட்டுள்ள, "பெடல் ஷிப்ட்' மற்றும், "ரிவர்ஸ் கேமரா, சன் ரூப்' போன்ற, பல சொகுசு அம்சங்களை கொண்டுள்ளது. ஹோண்டா சிட்டி, ஆறு அழகிய வண்ணங்களில், 2 ஆண்டு அல்லது, 40 ஆயிரம் கி.மீ., உத்தரவாதத்துடன் வந்துள்ளது. இதன் முன்பதிவு, நவம்பர், 2013ல் ஆரம்பமானது.பெட்ரோல் ரக மாடல் முன்பதிவு, பிப்ரவரி, 2014ல் தொடங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)